திமுக – அதிமுக கூட்டணி சாத்தியமா?… திமுக Ex அமைச்சர் சாமிநாதன் பேச்சுக்கு… விஜய் காரசார பதில்… அரசியலில் பரபரப்பு…!

By Swetha on ஐப்பசி 2, 2026

Spread the love

திமுக – அதிமுக இடையே கூட்டணி அமைவதில் என்ன தீமை ஏற்படப்போகிறது என்று திமுக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், அரசியல் களத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சில நேரங்களில் கூட்டணிகள் அமைவது இயல்பு தான் என்று குறிப்பிட்டார். மேலும், கடந்த காலங்களிலும் கூட திமுக மற்றும் அதிமுக இடையே இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைக் காலமாக திமுக – அதிமுக இடையே ரகசியக் கூட்டணி நிலவுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இத்தகைய சூழலில், முன்னாள் அமைச்சர் சாமிநாதனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.