MGR, ஜெயலலிதா பாணியில் விஜய்… பதறும் அரசியல் களம்…. காங்கிரஸ் ஓபன் டாக்…..!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

தமிழக முதல்வர் விஜய்யின் கர்நாடகப் பயணம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், காவிரி விவகாரத்தில் இரு மாநில முதலமைச்சர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது ஒன்றும் புதிதல்ல என்று விளக்கமளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்திலேயே இத்தகைய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகும் கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் நேரில் சந்தித்துப் பேசிய வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.

மேலும், பக்கத்து மாநில முதலமைச்சை நேரில் சந்தித்துப் பேசுவதாலேயே தமிழ்நாடு தனது மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்துவிடும் என்று அர்த்தமல்ல என்றும், உரிமைகளுக்காகப் போராடும் அதே வேளையில் பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறந்த வைப்பதே சரியான அணுகுமுறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.