Connect with us

டிஆர் ஸ்டைலில் கவிதை சொன்ன மாணவி.. அதற்கு விஜய் சொன்ன பதில்.. விருது வழங்கும் விழாவில் நடந்த சுவாரசியம்..

CINEMA

டிஆர் ஸ்டைலில் கவிதை சொன்ன மாணவி.. அதற்கு விஜய் சொன்ன பதில்.. விருது வழங்கும் விழாவில் நடந்த சுவாரசியம்..

 

தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பாக நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பள்ளி மாணவி கவிதை சொன்ன வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது கோட் படத்தில் நடித்து வருகின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இதை தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் அரசியல் பிரவேசம் எடுத்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

   

அரசின் நுழைவுக்குப் பின்னர் நேற்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களை நேரில் அழைத்து தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி இருந்தார். இந்த விழாவில் பங்கேற்பதற்கு பல மாணவ, மாணவிகள் வேன் மூலமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். திருவான்மியூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மாணவர்களுக்கு பல அறிவுரைகளை கூறினார்.

அதை தொடர்ந்து பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் மாணவியர்கள் மாணவர்கள் தளபதி விஜய் உடன் எப்படி எல்லாம் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க வேண்டுமோ அதை எல்லாம் சற்று கூட முகம் சுலிக்காமல் செய்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் விஜய் .அதைத் தொடர்ந்து பல மாணவியர்கள் நடிகர் விஜய்க்கு கவிதை கூறினார்கள்.

அப்படி மேடைக்கு வந்த ஒரு மாணவி சொன்ன கவிதை தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதனை நடிகர் விஜய் மிகவும் ரசித்துப் பார்த்தா.ர் அந்த மாணவி மேடையில் பேசியதாவது “இந்த இடத்திற்கு வருவதற்கு நான் பிடித்து எழுதியது பேனா.. நீ என்னை அழைக்காமல் போனால் உன்னை நான் விடுவேனா.. இன்னும் இரண்டு ஆண்டில் வருகிறது 2026 ஆம் ஆண்டு.. அப்பொழுதும் நான் வருவேன் மாணவ மாணவிகளின் முதல்வியாக, நீ எனக்கு பரிசளிப்பாய் மாநிலத்தின் முதல்வனாக..” என்று அவர் பேசிய கவிதைகள் தற்போது இணையத்தில் வைரலா.கி வருகிறது

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top