“யார் ஜெயிச்சா என்ன, தோத்தா என்ன… பங்கெடுத்தாலே போதும்…” ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த விஜய் ஆண்டனியின் வைரல் பேச்சு….!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2026

Spread the love

இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராகக் கலக்கி வரும் விஜய் ஆண்டனி, சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டுத் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய தத்துவார்த்தமான பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து சமீபத்தில் வெளியான ‘நூறு சாமி’ திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் அடுத்ததாக ‘அயோத்தி’ பட இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், “இப்போது எனக்கு விளையாட நேரம் கிடைப்பதில்லை. வாழ்க்கையின் சில அழுத்தங்கள் காரணமாக விளையாட நேரம் இல்லாதவர்கள் வாழ்க்கையையே ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

   

மேலும் தொடர்ந்த அவர், “வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நம் மனதை வலுப்படுத்தும். விளையாட்டில் யார் வெல்கிறார்கள், யார் தோற்கிறார்கள் என்பது முக்கியமல்ல; அதில் பங்கேற்பதே பெரிய விஷயம்” எனக் கூறினார். விஜய் ஆண்டனியின் இந்த எதார்த்தமான மற்றும் ஊக்கமளிக்கும் உரை தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.