கார் விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் பிரபல இளம் நடிகை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..

By Ranjith Kumar

Published on:

விஜய் ஆண்டனி படம் ஆன சைத்தான் படம் மூலம் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அருந்ததி நாயர். கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் தமிழ் படமான 2017 ஆம் ஆண்டு பொங்கி எழு மனோகரா என்ற தமிழ் படம் மூலம் இவர் முதல் முதலில் கோலிவுட்டில் அறிமுகமானார். அதற்கு அடுத்ததாக விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் என்ற படம் நடித்து ஓரளவு தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக தெரிய ஆரம்பித்தார்.

அதற்கு அடுத்ததாக இவருக்கு தூக்கி விட்ட மிகப்பெரிய படம்தான் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்த சைத்தான் படம். இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை என்று பெயர் வாங்க ஆரம்பித்தார். அதற்கு அடுத்ததாக இவருக்கு வந்து குவிந்த படங்கள் தான் கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள் போன்ற பல படங்கள் இதில் அடங்கும். இவர் தற்போது தமிழ், கேரளா, கன்னடம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வருந்து கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் திடீரென இவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

   


அருந்ததியும் அவரின் சகோதரரும் இருவரும் இணைந்து கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் காரில் சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெரிய வாகனம் ஒன்று இவர்களை அடித்து விட்டு அந்த இடத்திலிருந்து சென்று விட்டதாம். சாலை விபத்தில் சிக்கி அருந்ததி நாயர் மிகத் தீவிரமான சிகிச்சையில் ஈடுபட்டு வெண்டிலேட்டர் மூலம் அவர் உயிரை காப்பாற்றி வருகிறார்களாம்.

உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் அருந்ததி தற்போது மிக கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. அருந்ததி நாயரின் தங்கை இந்த விஷயத்தை வெளிப்படுத்திய போது இதைக் கேட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியாக உள்ளார்கள்.

author avatar
Ranjith Kumar