விஜய்க்கும் தேவயானிக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா..? இதை யாராவது கவனிச்சீங்களா..?

By admin on ஆனி 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகும் விளங்கும் விஜய் கடந்த 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கடந்த 1992-ஆம் ஆண்டு ரிலீசான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை தொடர்ந்தார்.

தேவயானி மகளுக்கு ஜோடியாகும் விஜய்யின் மகன்.. அப்பா இயக்குனரின் பேராசை -  Cinemapettai

   

பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், மின்சார கண்ணா, பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், ஷாஜகான் உள்ளிட்ட படங்கள் விஜயின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இவர் புதிய கீதை, திருப்பாச்சி அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், கில்லி, நண்பன், ஜில்லா, சர்க்கார், மாஸ்டர், லியோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்துள்ளார்.

   

மீனா வாய்ப்பை தட்டிபறித்த தேவயானி - விஜய்யை ஒதுக்க இது காரணம்

 

இதே போல நடிகை தேவயானி தொட்டா சிணுங்கி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கல்லூரி வாசல், பெரிய இடத்து மாப்பிள்ளை, நினைத்தேன் வந்தாய், ஃபிரண்ட்ஸ், பாட்டாளி, காதல் கோட்டை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Friends Movie Secrets | tamil cinema news | latest news

விஜய்யும் தேவயானியும் இணைந்து ஃபிரண்ட்ஸ், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இன்று தளபதி விஜய் தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதே நாளில் தான் நடிகை தேவயானியும் பிறந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று நடிகை தேவயானியும் தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இருவரும் ஜூன் 22 ஆம் தேதி 1974 ஆம் ஆண்டு பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.