காதல் மனைவி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் கொடுத்த இரண்டு அன்பு பரிசு!… வாவ் சூப்பரா இருக்கே!…

By Begam

Published on:

பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயன்தாராவிற்கு கொடுத்த அன்பு பரிசு பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 6 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர் என்பது நாம் அறிந்த ஒன்றே. இதைத்தொடர்ந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

   

இதைத் தொடர்ந்து எழுந்த பல சர்ச்சைகளுக்கும், பல கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த தம்பதியினர். தற்பொழுது இவர்கள் தங்களது குழந்தையுடன் மகிழ்வான வாழ்வை வாழ்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நயன்தாராவின் நடிப்பில் நாளை ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ‘கனெக்ட்’.

இத்திரைப்படத்தை நடிகை நயன்தாராவின் கணவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் சமீபத்தில் கலந்து கொண்ட நயன்தாரா பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் தன் கணவர் தனக்கு கொடுத்த இரண்டு முக்கியமான அன்பு பரிசுகளை காட்டியுள்ளார். வாட்ச் மற்றும் v எழுத்துள்ள பிரேஸ்லெட் இரண்டும் நடிகை நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் அன்பு பரிசாக கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்….