பிரபல ஹிந்தி நடிகரான வித்யூத் ஜம்வால் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்திலும், சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்திலும் வித்யூத் ஜம்வால் நடித்துள்ளார். தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வித்யூட் ஜம்வால் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். அதேபோல சிவகார்த்திகேயன் படத்திலும் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வித்யூத் ஜம்வால் ஹிந்தியில் ரிலீசான கிராக் என்ற படத்தை இணை தயாரிப்பு செய்து நடித்தார். அந்த படத்தில் நோரா, எமி ஜாக்சன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கிராக் படம் ரிலீஸ் ஆனது. சுமார் 45 கோடி பட்ஜெட்டில் கிராக் படம் உருவானது. ஆனால் படம் தோல்வியடைந்து 17 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது.
இந்த நிலையில் சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டதால் வித்யத் ஜம்வால் சர்க்கஸில் சேர்ந்து வேலை பார்த்து வருகிறார் என இணையத்தில் செய்திகள் உலா வந்தது. அதனை பார்த்த வித்யூத் ஜம்வால் அந்த சர்க்கஸ் அட்ரஸ் இருந்தால் எனக்கு அனுப்புங்கள். அங்கே சென்று பார்க்கிறேன் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதன் மூலமாக வித்யூத் சர்க்கஸில் வேலை பார்க்கிறார் என்ற செய்தி வதந்தி என்பது உறுதியானது.
View this post on Instagram