Connect with us

‘அப்பா சம்பாதிச்ச காச நான் குடிச்சே அழிச்சிட்டேன்.. மைனா படத்துல first கமிட்டானது நான் இல்ல.. எமோஷனல் ஆன விதார்த்..

CINEMA

‘அப்பா சம்பாதிச்ச காச நான் குடிச்சே அழிச்சிட்டேன்.. மைனா படத்துல first கமிட்டானது நான் இல்ல.. எமோஷனல் ஆன விதார்த்..

 

தமிழ் சினிமாவில் இன்று நன்கறியப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் விதார்த். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதலில் இவர் சமையல் காரராக இருந்து தனது  என் வாழ்க்கையை தொடங்கினார்.

சினிமா மீது கொண்ட ஆசை காரணமாக சினிமாவுக்கு வந்த இவர்  தமிழ் திரையுலகில் 2001ஆம் ஆண்டு முதல்  சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.  பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த இவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

   

அந்த படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்த விதார்த் கவனிக்கப்படும் நடிகரானார். அதன் பின்னர் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. குற்றமும் தண்டனையும், ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் குரங்கு பொம்மை போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

இவர் நடித்துள்ள அஞ்சாமை எனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி பல அரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “எங்கப்பா சிங்கப்பூரில் சமையல் காரராக வேலை செய்து கொஞ்சம் சம்பாதித்தார். அதை நான் பைக் வாங்குகிறேன் என்று செலவழித்துவிட்டேன். இன்னும் சொல்லப் போனால் குடித்தே அழித்துவிட்டேன்.

எனக்கு திருப்புமுனையாக அமைந்த மைனா திரைப்படத்தில் முதலில் பரணிதான் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் அதன் பின்னர் எனக்கு வாய்ப்பு வந்தது. அதே போல விஜய் சேதுபதியின் முதல் படமான தென் மேற்குப் பருவக் காற்று முதலில் நான் நடிக்க இருந்த படம். எனக்கு முன்னால் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க பரணிதான் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.” எனக் கூறியுள்ளார்.

 

Continue Reading
To Top