அடடே, பார்த்துட்டே இருக்கலாம் போலையே… 6 வயதில் அதிரடியாக கிரிக்கெட் விளையாடும் சிறுமி… இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 25, 2025

Spread the love

சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்படும் நிலையில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு கூட்டம் உள்ளது. பொதுவாகவே குழந்தைகள் செய்யும் சுட்டித்தனங்களும் அவர்கள் செய்யக்கூடிய சில விஷயங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அதன்படி தான் தற்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சிறுமியின் கிரிக்கெட் திறமை வீடியோவாக வெளியாகி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில் ஆறு வயதான சோனியா தன்னுடைய தந்தையின் சவாலுக்கு பதில் அளித்து வீசப்படும் ஒவ்வொரு பந்திலும் துல்லியமான ஷாட்களை விளையாடுகிறார்.

குறிப்பாக விராட் கோலியின் பாணியை நினைவூட்டும் கவர் டிரைவ் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வர இந்த சிறுமி இந்தியாவில் பிறந்திருந்தால் உலக தரத்தில் விளையாடி இருப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆறு வயதிலேயே பல்வேறு வகையான கிரிக்கெட் ஷாட்களை கற்றுக் கொண்டுள்ள இந்த சிறுமியை எதிர்காலத்தில் கிரிக்கெட் உலகின் ஒரு பிரகாசமான நட்சத்திரமாக வருவார் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

choti cricketers Sonia Khan jatoi பதிவைப் பகிர்ந்துள்ளார் (@soniacirctar)