Connect with us

வெயில் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்..!!

CINEMA

வெயில் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்..!!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான் வெயில். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பிரியங்கா நாயர். மலையாள நடிகையான இவர் வெயில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

மலையாள சினிமாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்த நிலையில் தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஆனால் வெயில் திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை. தொலைபேசி மற்றும் செங்காத்து பூமியிலே உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

 

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவர் மலையாள திரைப்படங்களில் மோகன்லால் மற்றும் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini

More in CINEMA

To Top