அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலல் வெற்றிமாறன் என்னை தான் கேட்டான்.. தாடி இல்லன்னு.. ஓப்பனாக பேசிய சீமான்..

By Ranjith Kumar

Updated on:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.  வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் விருதுகளை வாரி குவித்துள்ளது. சமீபத்தில் இவர் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது.


விடுதலை திரைப்படத்தின் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் திரையுலகில் களமிறங்கினார் காமெடி நடிகரான சூரி. மேலும் இத்திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி (வாத்தியார்) இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று அசத்தியிருந்தார்.

   


இவர்கள் மட்டுமின்றி இயக்குனர் கௌதம் வாசுதேவன், நடிகர் சேத்தன் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் விடுதலை திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அதன் இரண்டாம் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெற்றிமாறன் விடுதலையின் கதையை எழுதும் பொழுது கதாநாயகன் கதாபாத்திரத்தில் சூரியை வைத்து தான் எழுதினேன் என்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து சேதுபதி நடித்து மாபெரும் வரவேற்பு பெற்ற வாத்தியார் கதாபாத்திரத்தை முதன் முதலில் வெற்றிமாறன் அவர்கள் செந்தமிழ் சீமான் அவர்களை தான் அணுகியுள்ளாராம்.

ஆனால் அப்போது கட்சியில் மிக விறுவிறுப்பாக வேலை பார்த்த சீமான் அவர்களால் இதில் நடிக்க முடியவில்லையா, அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் தாடி வைத்து கரடுமுள்ளாக இருக்க வேண்டிய வாத்தியார் கதாபாத்திரத்தில், அந்த சமயத்தில் சீமான் அவர்கள் தாடி இல்லாமல் இருந்ததினால் இப்படத்தில் நடிக்க முடியாமல் கைவிட்டுப் போனது என்று, தற்போது தனியார் சேனல் ஒன்றில் பங்கேற்ற சீமான் ஓப்பனாக பேசி உள்ளார்.

author avatar
Ranjith Kumar