நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ் ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்தவர். முதலில் சினிமாவுக்குள் சண்டை கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கடந்த 1995-ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான கட்டுமரக்காரன் படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார். பிரபல காமெடி நடிகரான வடிவேலுவுடன் இணைந்து வெங்கல் ராவ் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெங்கல் ராவ் அளித்த பேட்டியில் கூறியதாவது, திடீர்னு கை, கால் விளங்காமல் போயிடுச்சு. என்னால பேச கூட முடியல. யாராவது உதவி பண்ணுங்க. மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு ரொம்ப செலவானது. கடைசில கையில பணம் இல்லாததால் ஹாஸ்பிடல்ல இருந்து அனுப்பிட்டாங்க. நீங்க வீட்ல போய் எக்சர்சைஸ் பண்ணா சரியாயிடும். நல்லா சாப்பிடுங்க.
ரெஸ்ட் எடுங்க அப்படின்னு சொல்லி ஆறு மாசம் மாத்திரை கொடுத்திருக்காங்க என கூறினார். இது பற்றி வெங்கடாவின் மனைவி கூறியதாவது, திடீர்னு இந்த மாதிரி கை கால் வரல. அவரால பேசக்கூட முடியல. இதனால ஆந்திராவுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன் அங்க 60 ஆயிரம் செலவாச்சு. அதுக்கப்புறம் பணம் இல்லாததால் வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க. டாக்டரும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருங்கன்னு சொல்லிட்டாங்க.
ஆறு மாசம் மாத்திரை கொடுத்து இருக்காங்க. இதுக்கு முன்னாடி உடம்பு சரியில்லைன்னு செய்தி வந்தது எல்லாம் உண்மை இல்லை. இப்பதான் அவருக்கு உண்மையிலேயே உடம்பு சரியில்லை. எங்களுக்கு ஒரே பொண்ணு. ஆம்பள பசங்க கிடையாது. ரொம்ப கஷ்டப்படுறோம். பொண்ணும் உதவியும் பண்ற நிலைமைல இல்ல. ரேஷன் அரிசி சாப்பாடு தான். ஆந்திராவில் யாரும் ஹெல்ப் பண்றது கிடையாது.
தமிழ் மக்கள் தான் ஹெல்ப் பண்ணனும். இங்கே யாரும் இல்லை. விஜயவாடா பெரிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன். அங்கேயும் கை கால் ஸ்ட்ரோக் வந்துட்டேன்னு சொல்லிட்டாங்க. 60,000 காசு வச்சிருந்தேன். ஹாஸ்பிடல்லயே அது செலவாயிடுச்சு. அதனால அங்கிருந்து வந்து விட்டோம் இப்ப நிலைமை அப்படித்தான் இருக்கு இவர் எல்லாருக்கும் உதவி பண்ணுவாரு சாப்பாட்டுக்கு இல்லன்னு யாரும் சொன்னா கூட கையில் இருந்த காசு கொடுத்துடுவாரு. இந்த மாதிரி நிலைமை வரும்னு நான் எதிர்பார்க்கல என கண்கலங்கியபடி கூறியுள்ளார்.