பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் வனிதா விஜயகுமாரின் மகன்.. வெளியான அறிவிப்பு..!!

By Priya Ram on ஏப்ரல் 2, 2024

Spread the love

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக வனிதாவும் ஆகாஷும் பிரிந்து விட்டனர். ஶ்ரீ ஹரியை ஆகாஷ் தான் வளர்த்து வந்தார்.

   

ஜோவிகா வனிதாவுடன் வளர்ந்து வந்தார். நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தினரும் வனிதாவை ஒதுக்கி வைத்தனர். அதன் பிறகு வனிதா ஆனந்த் ஜெயராமன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜெய்னிதா என்ற மகள் பிறந்தார்.

   

 

அதன் பிறகும் பீட்டர் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்து விட்டார். இந்த நிலையில் ஸ்ரீஹரி சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தார்.

மேலும் குறும்படங்கள் எழுதி இயக்கி நடித்தும் வந்துள்ளார். தற்போது பிரபல இயக்குனரான பிரபு சாலமன் இயக்கும் படத்தில் ஸ்ரீ ஹரி ஹீரோவாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் கும்கி, மைனா ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர்.