விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இன்றுடன் வெற்றிகரமாக 61 நாட்களையும் நிறைவு செய்துள்ளது. இந்த போட்டியில் நடிகை வனிதாவின் மகளான ஜோதிகா வும் கலந்து கொண்டுள்ளார். இவர் பிக் பாஸ் மாயா gang உடன் இணைந்து செய்யும் செயல்கள் ரசிகர்களை எரிச்சலடைய வைத்து வருகிறது.

இந்த சீசனில் பங்குபெற்றுள்ள நடிகை விசித்ரா நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவிடம் படிப்பை பற்றி பேசிய விஷயம் பலரது பாராட்டையும் பெற்றது. நடிகை வனிதாவின் மகளான ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இதனால் மிகப்பெரிய சண்டையே நடந்தது. இந்த விஷயத்தில் கமலஹாசன் விசித்ராவுக்கே சப்போர்ட் செய்து அடிப்படை கல்வி மிக அவசியம் என்பதை ஜோவிகாவுக்கு உணர்த்தினார். ஆனால் தன் மகளுக்கு ஆதரவாக இணையத்தில் பல்வேறு பதிவுகளையும், வீடியோக்களையும் தற்பொழுது வரை வெளியிட்டு ஆதரவு திரட்டி வருகிறார் நடிகை வனிதா.

தற்போது பிக் பாஸ் வீட்டில் ஜோவிகாவின் தமிழை பார்த்து, இதற்கு தான் படிப்பு வேணும் என்று சொல்லுற அளவுக்கு அவரின் செய்கைகள் ஒவ்வொன்றும் இருந்து வருகிறது. அதாவது, பிக் பாஸ் வீட்டில் உள்ள ஜோவிகா தனது பெயரை தமிழில் எழுத முயற்சி செய்துள்ளார். அதற்கு மாயாவும் ஹெல்ப் பண்ணுகிறார்.

இதை தொடர்ந்து வந்த பூர்ணிமாவுக்கு தனது பெயர் சரியா? என காட்டி திருத்திக் கொள்கிறார்.இவ்வாறு தமிழை தமிழில் கூட எழுத தெரியாதவராக ஜோவிகா உள்ளதை பார்த்து நெட்டிசன்கள் அவரை அதிகம் ட்ரோல் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
#Jovika writes her in Tamil ????
Well done Jovika ????????#BiggBossTamil #BiggBossTamil7#BiggBoss7 #BiggBoss7Tamil#BiggBossTamilSeason7 #BiggBosspic.twitter.com/229fWfRIFy
— Sekar ???? (@itzSekar) November 29, 2023
