தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சியினரும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் மும்முறமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக நேற்று ஒரு செய்தி இணையத்தில் வெளியானது. அதேசமயம் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில் அந்தச் செய்தி அடிப்படையை ஆதாரம் அற்றது என அவர் மறுத்துள்ளார். இபிஎஸ் இடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தியில் எள்ளளவும் உண்மை இல்லை. இது போன்ற பொய் செய்திகள் எனக்கு வருத்தம் அளிக்கிறது. அதிமுகவை மீட்டெடுத்து ஆட்சியில் அமர வைப்பது தான் எனது நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்
