Connect with us

நான் செய்த ரகளையால் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட பாரதிராஜா…  வடிவுக்கரசி பகிர்ந்த ஷாக்கிங் தகவல்!

CINEMA

நான் செய்த ரகளையால் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட பாரதிராஜா…  வடிவுக்கரசி பகிர்ந்த ஷாக்கிங் தகவல்!

 

தமிழ் சினிமாவில் சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வடிவுக்கரசி. படித்துக் கொண்டிருந்த போதே வீட்டுக்குத் தெரியாமல் அந்த படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். ஆனால் அவரின் வித்தியாசமான மிடுக்கான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதன் பின்னர் பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போது வரை அசத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவ்வாறு தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். வடிவுக்கரசி எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்தன. சிவப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை மற்றும் கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

   

இந்நிலையில் பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் அவருக்கு கதாபாத்திரம் கொடுக்காததால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று சண்டை போட்டாராம். இது பற்றி சாய் வித் சித்ரா நேர்காணலில் பேசிய அவர் “கிழக்குச் சீமையிலே படத்தில் விஜயகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என சொல்லி என அழைத்தனர். மறுநாள் எனக்கு பிறந்தநாள் என்பதால் நான் தயங்கியபடியே, திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே சென்றேன்.

அங்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றால் திடீரென்று எனக்கு வேடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அது எனக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் நான் இயக்குனரை கடுமையாக கோபித்துக் கொண்டு சண்டை போட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டே ரணகளம் ஆகிவிட்டது. நான் பண்ணிய ரகளையைப் பார்த்து பாரதிராஜா சார் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டார். நம் இயக்குனரின் படத்தில் நமக்கு வேடம் இல்லை என்று சொல்லிவிட்டார்களே என்ற கோபம்தான் எனக்கு.

அதன் பின்னர் அவர் இயக்கிய கருத்தம்மா திரைப்படத்தில் எனக்கு நல்ல வேடம் கொடுத்தார். நானும் போய் நடித்தேன். அப்புறம் இருவரும் சமாதானம் ஆகிவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

Continue Reading
To Top