ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் செம்பருத்தி. பல வருடங்களாக ஒளிபரப்பான இந்த சீரியலை யாராலும் மறந்து இருக்க முடியாது.
இந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது.
குறிப்பாக ஹீரோயினிக்கு மட்டுமல்லாமல் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த வனஜாவின் கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தான்.
அந்த கேரக்டரில் நடித்த நடிகையின் பெயர் லட்சுமி. அவர் ஊர் ரொம்ப லட்சுமி என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும்.
ஆனால் தற்போதும் வனஜாவாகவே அவர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். செம்பருத்தி சீரியல் பல வில்லிகள் இருந்தாலும் வனஜா கேரக்டர் தான் அதிகமாக தினமும் ரசிகர்களால் திட்டி தீர்க்கப்பட்டது.
அந்த சீரியலில் இருந்து விலகிய பிறகு இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த சீரியல் பேரன்பு. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பேரன்பு என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலிலும் இவரின் கதாபாத்திரத்தை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அந்த அளவிற்கு தன்னுடைய அற்புதமான நடிப்பால் ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார்.
நடிகை லட்சுமி முதல் முறையாக ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஊர் வம்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.
அதுவே தற்போது வரைக்கும் அவரின் அடையாளமாக உள்ளது. ஆனால் செம்பருத்தி சீரியல் க்கு பிறகு அவர் வனஜா என்று தான் அதிகமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.
சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக அவரின் மகனோடு இவர் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதே சமயம் அவரின் மகனுடன் சேர்ந்து youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
தான் அடிக்கடி செய்யும் சேட்டைகள் மற்றும் செல்லும் இடங்களை எல்லாம் வீடியோவாக எடுத்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பகிர்ந்து வருவது வழக்கம்.
சமீபத்தில் கூட இவர் அப்பார்ட்மெண்டில் ஒரு பொது வீடு வாங்கி இருந்த நிலையில் அதை தொடர்பான வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஊர் வம்பு லட்சுமியின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.















