நள்ளிரவில் நடந்த கொடூரம்… “மர்ம நபரின் வெறிச்செயல்…” ரத்த வெள்ளத்தில் மிதந்த தாய், மகள்… கரூரில் குலை நடுங்க வைக்கும் சம்பவம்… போலீஸ் தீவிர விசாரணை…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த நங்கவரம் அருகே உள்ள எம்.ஆர்.பட்டியில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் (65) மற்றும் அவரது மகள் மஞ்சுளா (42) ஆகியோரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த தாய் பாப்பம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மகள் மஞ்சுளா மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தார். வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட பாப்பம்மாளின் பேத்தி நேற்று இரவு பாட்டி வீட்டிற்கு வந்து சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீதுள்ள சந்தேகத்தின்பேரில் தனிப்படை போலீசார் கோவைக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.