பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

By Soundarya on ஆனி 23, 2026

Spread the love

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மிகவும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தவெக தலைவர் விஜய், பேரவையின் மரபுகள் மற்றும் மாண்புகளுக்கு முற்றிலும் எதிரான வகையில் தொடர்ந்து உளறி வருவதாக அவர் சாடியுள்ளார். மேலும், அரசியல் களத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்கத் தெரியாமல், ‘குட்டிக்கதை’ சொல்கிறேன் என்ற பெயரில் விஜய் இவ்வாறு பேசுவது, அவரின் அப்பட்டமான அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பப் பின்னணிச் சர்ச்சைகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனைத் தேடி அலைந்த ஒரு மனைவியின் கதை தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்” என்று அனல் பறக்கும் வகையில் குறிப்பிட்டார். தவெக தலைவர் விஜய் முதலில் தன் மீதுள்ள விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டுமே தவிர, சட்டப்பேரவை போன்ற உயரிய இடத்தில் அமர்ந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் திமுகவை நோக்கி விரல் நீட்டக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் தனது பேட்டியில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.