“2031 CM கனிமொழியா?…. அறிவாலயத்தில் வெடித்த புது பூகம்பம்…. ஸ்டாலினிடம் புகார் அளித்த உதயநிதி… காலையிலேயே பெரும் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 29, 2026

Spread the love

திமுகவின் உட்கட்சி அரசியலில் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தேர்தல் களச் சூழல்களுக்குப் பிறகு, கனிமொழி மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி, அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறார். இதே காலகட்டத்தில், “திமுகவின் அடுத்த தலைவரே கனிமொழிதான்” என்றும், “2031-ஆம் ஆண்டின் முதலமைச்சர் வேட்பாளர் கனிமொழி” என்றும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்களும் பிரச்சாரங்களும் தீயாகப் பரவி வருகின்றன.

இந்த வீடியோக்களின் திடீர் வருகை கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் தரப்பு இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த சமூக வலைதளப் பிரச்சாரங்களின் பின்னணியில் கனிமொழியின் ஆதரவாளர்களே செயல்படுகிறார்கள் என்றும், திட்டமிட்டே இத்தகைய வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுவதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் உதயநிதி புகார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. உட்கட்சி வாரிசுப் போட்டி குறித்த விமர்சனங்கள் எழும் சூழலில், இந்த புதிய மோடல் விவகாரம் திமுக மேலிடத்திற்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.