#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

By Nanthini on சித்திரை 16, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த அறிக்கையின் முதல் பிரதியை விவசாயி நாராயணனிடம் வழங்கிய அவர், அதனைத் தொடர்ந்து ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர், தூய்மைப் பணியாளர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, கைத்தறி நெசவாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் வழங்கி தனது மக்கள் நலப் பார்வையை வெளிப்படுத்தினார். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, எளிய மனிதர்களின் கைகளால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது அக்கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களாக 200 யூனிட் வரை இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு 100 சதவீத பயிர்க்காப்பீடு மற்றும் 5 லட்சம் இலவச சோலார் பம்ப் செட்டுகள் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சகம் மற்றும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் ரூ.18,000 சம்பளம், பட்டதாரிகளுக்கு உதவித்தொகை, கரும்புக்கு கூடுதல் ஆதார விலை மற்றும் மணப்பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் என அனைத்துத் துறை சார்ந்த மக்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான திட்டவரைவை விஜய் முன்வைத்துள்ளார்.