ப்ளீஸ் இன்னும் ஒரு முறை சொல்றீங்களா..? மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு tvk விஜய் வைத்த 2 முக்கிய கோரிக்கை..

By Mahalakshmi on ஜூன் 28, 2024

Spread the love

தமிழக வெற்றி கழகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் அதில் நடிகர் விஜய் பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென்று தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி வருகிற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றார். மேலும் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்த நிலையில் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு பின்னர் சினிமாவிலிருந்து மொத்தமாக விலகி அரசியலில் ஈடுபட போவதாக அவர் கூறியிருந்தார்.

   

   

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தமிழக முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவி தொகை மற்றும் விருது வழங்கிய கௌரவித்திருந்தார் நடிகர் விஜய். அதேபோல இந்த ஆண்டும் உதவி தொகை மற்றும் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார். தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியின் தலைவராக இந்த முறை மாணவர்களை சந்தித்தார் நடிகர் விஜய்.

 

21 மாவட்டங்களில் இருக்கும் 800 மாணவர்களுக்கு முதற்கட்டமாக இன்று சென்னை திருவான்மையூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருது வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது கட்டமாக ஜூலை மூன்றாம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது .அதன்படி இன்று கல்வி விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் பின்னர் மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து மேடை ஏறி பேசிய அவர் மாணவர்களுக்கு பல விஷயங்களை கூறியிருந்தார். முதலில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த அவர் தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை, அரசியலில் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் நல்ல தலைவர்கள் அதில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது தன்னுடைய கருத்து. சில அரசியல் கட்சிகள் பொய்யான பிரச்சாரங்களை செய்து கொண்டு வருகிறார்கள். அதை எல்லாம் முதலில் நம்ப கூடாது. அரசியல் குறித்த விசாலமான பார்வையை முதலில் இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு என்பது அதிகரித்திருப்பது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.

உங்கள் நண்பர்கள் யாராவது தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்துங்கள். நீங்கள் பெற்றோர்களை காட்டிலும் அதிக நேரம் நண்பர்களிடம் செலவிடுவதால் அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது என்பது மிக முக்கியமானது. மீடியாக்களில் நிறைய புரணி பேசுகிறார்கள். நல்லவர்கள் கெட்டவர்களைப் போலவும் கெட்டவர்கள் நல்லவர்களைப் போலவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

எது நல்லது எது கெட்டது என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய கடமை மாணவர்களுக்கு இருக்கின்றது. மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை உறுதிமொழி எடுக்க சொன்ன விஜய் Say NO to Temporary Pleasures Say NO to Drugs என்று கூறியிருந்தார். அதனை மாணவர்களையும் பெற்றோர்களையும் உறுதிமொழி எடுக்க செய்தா.ர் அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றார்.