மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெயிண்டர் வேலை பார்த்து வரும் கண்ணன் (21) என்ற அந்த நபர், நள்ளிரவு நேரத்தில் மாணவியின் வீட்டிற்குள் புகுந்து அவருக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது அவர் அங்கிருந்தவர்களிடம் கையும் களவுமாகச் சிக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கண்ணன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
