எடப்பாடி கோட்டையில் கடைசி நேர ட்விஸ்ட்..! விலை போன வேட்பாளர்… சுயேச்சை வேட்பாளருக்கு தவெக திடீர் ஆதரவு..!!

By Soundarya on சித்திரை 20, 2026

Spread the love

சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், வேட்புமனுவை முழுமையாக நிரப்பாத காரணத்தால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்பட்ட கையோடு அருண்குமார் தனது செல்போனை அணைத்துவிட்டு மாயமானதால், அவர் அதிமுகவிடம் விலை போய்விட்டதாக தவெகவினர் கடும் அதிருப்தியடைந்தனர். இதனால் அந்தத் தொகுதியில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்தது.

 இந்நிலையில், இடைப்பாடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு தனது ஆதரவை தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், பிரேம்குமார் ஏற்கனவே தவெக ரசிகர் மன்ற நிர்வாகியாகப் பயணித்தவர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள “தொலைக்காட்சிப் பெட்டி” சின்னத்திற்கு தவெகவினர் ஒருமனதாக வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

   

 எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடும் தொகுதியில் தவெகவின் வேட்புமனுவை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றி பெற நினைப்பவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று விஜய் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லாத சூழலில், தனது முன்னாள் நிர்வாகியான சுயேச்சை வேட்பாளரை விஜய் முன்னிறுத்தியிருப்பது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதரவு அறிவிப்பு இடைப்பாடி தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கியுள்ளது.