ஐயோ போரே வேணாம்டா சாமி… என்ன விட்டுடுங்க… பெருத்த அடி வாங்கிய அமெரிக்கா?… ஈரானுடன் சமரசத்திற்கு துடிக்கும் ட்ரம்ப்… அடுத்து நடக்கப்போவது என்ன?… பகீர் பின்னணி…!

By Swetha on ஆவணி 6, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நடைபெற்று வரும் போரினால் இரு நாடுகளுக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா பல ஈரானியத் தளங்களை அழித்துள்ள போதிலும், வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்களுக்கான அதிகப்படியான பணச் செலவு அமெரிக்காவிற்குப் பெரும் பொருளாதார அடியாக அமைந்துள்ளது. இதன்காரணமாக, பாகிஸ்தானின் சமரச முயற்சிகள் தோல்வியடைந்த போதிலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலதிக போரைத் தவிர்த்து எந்த விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சாத்தியமான தற்காலிக ஒப்பந்தத்தின் வரைவு தயாராகி, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக, ஓமனுடன் ஈரான் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் மூலம் மூன்று மாத காலத்திற்கான ஒரு தற்காலிக ஏற்பாட்டை எட்டுவதே நோக்கமாக உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குக் கால வரம்புகள் எதுவுமில்லை என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

   

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் தற்போதைய பதற்றம் தணிய வாய்ப்புள்ளது. அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானியக் கப்பல்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டால் தாங்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை என்று ஈரானிய மூத்த ராணுவ அதிகாரி ரெஸாயி எச்சரித்துள்ளார். தங்கள் கப்பல்களுக்கு வழிவிடாவிட்டால், அமெரிக்கக் கப்பல்கள் மீது டெஹ்ரான் தாக்குதல் நடத்தும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.