ராஜமவுலி இயக்கத்தில் நடிகை திரிஷா நடிக்க மறுப்பு தெரிவித்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. சவுத் இந்தியன் குயின் என அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். தொடக்கத்தில் அஜித், விஜய், சூர்யா ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த அதைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தது.

#image_title
குந்தவையாக நடித்து அனைவரது மனதிலும் மீண்டும் இடம் பிடித்தார் திரிஷா . தற்போது தமிழ் மட்டும் தெலுங்கில் ஒரு ரவுண்டு வரும் திரிஷா பழையபடி முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றார், நடிகர் விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.
மேலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க மறுத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் ராஜமௌலி பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் மிகப்பெரிய புகழே பெற்றுவிட்டார்,
அதை தொடர்ந்து இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் சர்வதேச அளவில் மிகப்பெரிய விருதுகளை எல்லாம் வாங்கி குவித்து பிரபலமானது, இதனால் இவருடைய இயக்கத்தின் நடிப்பதற்கு பல நடிகர் நடிகைகள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இப்படி மிகப்பெரிய பெருமையை உடைய ராஜமவுலி இயக்கத்தில் நடிகை திரிஷா நடிக்க மறுத்துள்ளார். அதாவது இயக்குனர் ராஜமவுலி மரியாதை ராமண்ணா என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அப்படத்தில் காமெடி நடிகர் சுனில் ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு தான் திரிஷாவை அணுகினார்களாம். ஆனால் திரிஷா காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்தால் என்னுடைய மார்க்கெட் குறைந்து விடும். தன்னால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க முடியாது என்று கூறி பட வாய்ப்பு மறுத்தவராக கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் தான் தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கும் புல்லு ஆயுதம் என்ற திரைப்படம்.