ஒரே நாளில் 2 முறை விலை உயர்வு…. ரூ.85,000 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை… ஷாக்….!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று காலை ஆபரணத் தங்கம் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 84,000 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 10,500 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை தங்கம் விலை சவரனுக்கு 1120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.