குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. தேர்வர்கள் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டிலேயே என்னென்ன தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி குரூப் 1 தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி, குரூப் 2, 2A தேர்வு அக்டோபர் 25ஆம் தேதி, குரூப் 4 தேர்வு டிசம்பர் 20ஆம் தேதி, தொழில்நுட்ப தேர்வுக்கான நேர்காணல் நவம்பர் 14ஆம் தேதி, நேர்காணல் இல்லாதது ஆகஸ்ட் மூன்றாம் தேதி , டிப்ளமோ மற்றும் ITI அளவிலான தொழில்நுட்ப தேர்வு செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் ஜூலை மாதத்திற்கு பிறகு அனைத்து தேர்வுகளும் தொடங்குகிறது. தேர்வு அட்டவணையை அறிய www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
