“என் அண்ணனுக்காக அந்த படத்தை விட்டுக்கொடுங்க…” இளையராஜா வைத்த கோரிக்கையால் திசைமாறிய தியாகராஜனின் திரை வாழ்க்கை!

By vinoth on ஜூலை 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகன் ஆன நடிகர்களில் ஒருவர் தியாகராஜன். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் ஒரு முரட்டுத்தனமான வில்லன் வேடத்தில் அவர் நடித்திருந்தார்.  அந்த வேடத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அவர் கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு வில்லனாக நடிக்கத் தொடங்கி ஒரு கட்டத்தில் மலையூர் மம்பட்டியான் திரைப்படம் மூலமாகக் கதாநாயகனும் ஆனார்.

பாரதிராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்து அமோக வெற்றிபெற்ற திரைப்படம்தான் “அலைகள் ஓய்வதில்லை”. இத்திரைப்படத்தில்தான் கார்த்திக், ராதா ஆகியோர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள். ஒரு இந்து ஆணுக்கும் கிறுஸ்துவ பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் கிறிஸ்துவ பெண்ணின் அண்ணன் வேடத்தில் தியாகராஜன் நடித்திருப்பார்.

   

ஆனால் இந்த படத்தில் அவர் முதலில் நடிக்கவே விரும்பவில்லையாம். இந்த படத்தை இளையராஜா, பாரதிராஜா மற்றும் தான் மூவரும் சேர்ந்த ராஜா பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பதாகதான் இருந்தாராம். ஆனால் இப்போது இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்ததால் அவருக்காக இந்த படத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என இளையராஜா கேட்டாராம்.

   

அதனால் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டாராம். அப்போதுதான் பாரதிராஜா வந்து கேட்க “இளையராஜா கேட்டுக் கொண்டதால் நான் விலகிவிட்டேன் என சொன்னாராம். அதைக் கேட்ட பாரதிராஜா “அப்படியானால் இந்த படத்தில் நீ நடி” என்று கூறியுள்ளார். முதலில் தியாகராஜன் மறுத்தாலும் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார் பாரதிராஜா. அப்படி எதிர்பாராத விதமாக நடிகரான தியாகராஜன் இன்று 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.