நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்து வந்த நிலையில் அந்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக தன்னுடைய கெரியரை தொடங்கியவர் நடிகர் விஷால். நடிகர் அர்ஜுனின் வேதம், ஏழுமலை உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி பிரபல தயாரிப்பாளர் ஆவார். தமிழில் பல திரைப்படங்களை தயாரித்திருக்கின்றார் இருப்பினும் தெலுங்கில் தான் இவர் பேமஸ்.
தமிழில் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவரது கனவு இயக்குனராக வேண்டும் என்பதுதான். ஆனால் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது. சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு உள்ளிட்ட அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்த இவர் கடைசியாக ஹரி இயக்கத்தில் வெளிவந்த ரத்னம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை கொடுத்தது. இவர் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் துப்பறிவாளன். இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை மிஸ்கின் இயக்க இருந்தார். ஆனால் என்ன பிரச்சனையோ தெரியவில்லை இருவரும் சண்டை இட்டுக் கொண்டு இந்த திரைப்படத்தை எடுக்கவில்லை.
இதனால் இந்த திரைப்படத்தை தானே எடுக்க இருப்பதாக விஷால் அறிவித்திருந்தார். அந்த விஷயத்தை அவர் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். தன்னுடைய 25 கால கனவு தற்போது நனவாக உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்ன ஆக வேண்டும் என்ற ஆசையோடு திரைத்துறைக்கு வந்தேனோ, அந்த கனவு தற்போது நினைவாக உள்ளது .நான் டைரக்டராக வேண்டும் என்று தனது தந்தையிடம் கேட்டதாகவும் அவர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக தன்னை இணைத்து விட்டதாக அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
ஆனால் தற்போது தன்னுடைய பாதை மாறிவிட்டது. இப்போது துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கின்றேன் என்று கூறி இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாகவும், இதற்காக வெளிநாடுகளில் லொகேஷன் பார்த்து வருவதாகவும் பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
கடைசியில் இந்த திரைப்படம் தற்போது டிராப் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏனென்றால் இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு எந்த தயாரிப்பாளர்களும் முன்வராத காரணத்தினால் படத்தை எடுக்கும் முயற்சியை விஷால் கைவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் புது திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்தை யாவது எந்த தயாரிப்பாளர்கள் இயக்கப் போகிறார்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள்.