தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தங்களை வலுப்படுத்தி வரும் வேளையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தற்போது அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரே நாளில் கழக தலைமை நிலைய செயலாளரும் தருமபுரி மாவட்ட செயலாளருமான டி.கே. ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கே.பி. நல்லசாமி மற்றும் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.கே. செல்வம் ஆகிய மூவரையும் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
உள்கட்சி ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இந்த நீக்கம் அரங்கேறியிருந்தாலும், பதவிகளை இழந்த இந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் விரைவில் மாற்றுக்கட்சிக்கு மாறத் திட்டமிட்டுள்ளதே இந்த அதிரடி ஆக்ஷனுக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது, இது அமமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
