சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். 2007 ஆம் ஆண்டு கூடல் நகர் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சீனு ராமசாமி.
அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகம் செய்தது இவர்தான். இந்த திரைப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை நயனாக அறிமுகப்படுத்திய காரணத்தால் சீனு ராமசாமியை தனது குருவாகவே இன்றளவும் பார்க்கிறார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு நீர் பறவை 2013 ஆம் ஆண்டு இடம் பொருள் ஏவல் 2016 ஆம் ஆண்டு தர்மதுரை 2022 ஆம் ஆண்டு மாமனிதன் தற்போது இவர் இயக்கிய கோழி பண்ணை செல்லத்துரை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இவரது படங்கள் எல்லாமே ஒரு ஆழமான கருத்துக்களையும் காண்போரின் மனதில் தாக்கம் ஏற்படுத்த கூடியதாகவே இருக்கும்.
இவர் இயக்கி நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தர்மதுரை. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சீனு ராமசாமி அவர்களிடம் தர்மதுரை திரைப்படத்தில் முதல் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷை காதலிப்பார். மீண்டும் சிறிது காலம் கழித்து தமன்னாவை காதலிப்பார். இரண்டாவது காதல் வருமா அந்த கதைக்கு ஏன் அப்படி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விளக்கமாக மனம் திறந்து பதில் அளித்து இருக்கிறார் சீனு ராமசாமி.
சீனு ராமசாமி கூறியது என்னவென்றால் காயப்பட்ட ஒரு ஆணும் காயப்பட்ட ஒரு பெண்ணும் ஒன்றாக இணையும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் மருந்தாக இருப்பார்கள். இந்த கதையில் வரும் இருவரும் ஒரு தவறும் செய்யாதவர்கள். உறவினர்களால் காயப்பட்டு கைவிடப்படும் போது அவர்கள் இருவரும் நல்லா வாழனும் இல்லையா அதனால்தான் இவர்கள் இருவரின் காதலை நான் உருவாக்கினேன் என்று ஓபனாக கூறியிருக்கிறார் சீனு ராமசாமி.