‘இதைத்தான் எதிர்பார்த்தேன்.. இது ஒரு தவறா?’… நடிகை சீதா பார்த்திபனை விவாகரத்து செய்ய காரணம் இதுதானா?… வைரலாகும் தகவல் இதோ!…

‘இதைத்தான் எதிர்பார்த்தேன்.. இது ஒரு தவறா?’… நடிகை சீதா பார்த்திபனை விவாகரத்து செய்ய காரணம் இதுதானா?… வைரலாகும் தகவல் இதோ!…

நடிகை சீதா தனது முன்னாள் கணவரான பார்த்திபனை விவாகரத்து செய்ய இதுதான் காரணம் என்று ஒரு சில தகவல்களை நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜா நடை என பல படங்களில் நடித்து மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவர் நடிகர் பார்த்திபனுடன் இணைந்து பாரதி கண்ணம்மா, வருவாய் என, புதிய பாதை போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்தார். இதன் பிறகு நடிகர் பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்துடன் ஆண் குழந்தை ஒன்றையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

11 வருடம் இணைந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2001ல் விவாகரத்து பெற்றனர். இதை தொடர்ந்து நடிகை சீதா தனது 43 வது வயதில் டிவி நடிகர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரையும் சில மாதங்களிலேயே விவாகரத்து செய்து விட்டார்.

இந்நிலையில் நடிகை சீதா தனது முதல் கணவர் பார்த்திபனை விவாகரத்து செய்ய இதுதான் காரணம் என நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என ஒரு படத்தில் வரும் பாடல் போல நான் எதிர்பார்த்ததில் என்ன தவறு. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இது ஒரு தவறா?’ என கூறியுள்ளார்.

Begam