கமலஹாசன் உடன் இதுவரை நடிக்காததற்கு காரணம் இதுதான்!… நடிகை நதியா ஓபன் டாக்!…. ஷாக்கான ரசிகர்கள்!…

கமலஹாசன் உடன் இதுவரை நடிக்காததற்கு காரணம் இதுதான்!… நடிகை நதியா ஓபன் டாக்!…. ஷாக்கான ரசிகர்கள்!…

நடிகை நதியா இதுவரை நடிகர் கமலஹாசன் தான் இணைந்து நடிக்காததன் காரணம் பற்றி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

80களில் தனக்கென நடிப்பிலும் ஆடை மற்றும் பேஷன் உலகிலும் தனி இடத்தை பிடித்து  கட்டி பறந்தவர் நடிகை நதியா. இப்பொழுதும் அதே அழகுடன் ‘எவர்கிரீன் அழகி’ என்று அழைக்கப்படுகிறார். நடிகை நதியா பிறந்தது மும்பையில் தான். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நதியாவின் தந்தை மும்பையில் செட்டில் ஆனதால் நதியா மும்பையில் பிறந்தார்.

நடிகை நதியாவின் இயற்பெயர் ஷரீனா அனுஷா. இவர் சினிமாவுக்கு வந்தபின் தனது பெயரை நதியா என மாற்றிக் கொண்டார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் டாப் நாயகியாக 80 to 90 காலகட்டத்தில் வலம் வந்தார். இவர் தற்பொழுது வரை சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்,

1988ல் மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கமலஹாசன் உடன் இதுவரை நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கமாக கூறியுள்ளார்.

இதில் அவர் தான் கமலஹாசன் உடன் நடிக்காமல் போனது வருத்தமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான் இருப்பதாக கூறியுள்ள அவர் கால்ஷீட் பிரச்சினைதான் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமலஹாசனின் பட வாய்ப்பு வரும்போது வேறொரு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவருடன் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் கூட முதலில் நடிகை நதியா தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் நடிகை நதியாவால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Begam