‘இவர் தான் என் வருங்கால மனைவி’…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…விரைவில் டும் டும் டும்…திருமண அறிவிப்பை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்…

By Begam

Published on:

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது காதலியுடன் கை கோர்த்து தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார்.இதைத் தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

   

 

நடிகர் விவேக்குடன் இணைந்து இவர் நடித்த ‘தாராள பிரபு’ படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. வித்யாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் , நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்பொழுது நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியுடன் கை கோர்த்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் தன் வருங்கால மனைவியுடன் இருக்கும்  புகைப்படங்களையும் வெளியிட்டு திருமண அறிவிப்பையும் பதிவு செய்துள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.