Connect with us

மைனா படத்துல நடிச்சதுக்கு இவ்ளோ தான் சம்பளம் கொடுத்தாங்க… வருத்தப்பட்ட விதார்த்…

CINEMA

மைனா படத்துல நடிச்சதுக்கு இவ்ளோ தான் சம்பளம் கொடுத்தாங்க… வருத்தப்பட்ட விதார்த்…

விதார்த் தமிழ் சினிமாவில் நடிக்கும் பிரபல நடிகர் ஆவார். விதார்த் தனது நண்பர்கள் மூலம் கூத்துப்பட்டறை நாடகக் குழுவில் சேர்ந்தார். பின்னர் நடிப்பில் நுணுக்கங்களை படிப்படியாக கற்கத் தொடங்கினார். 2001 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய மின்னலே திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் விதார்த்.

   

அவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. என்றாலும் நாடக குழுவுடன் சேர்ந்து சிறிய சிறிய வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார். சில வருடங்களுக்கு பிறகு பிரபு சாலமன் கூத்துப்பட்டறையில் இவரது நடிப்பு திறமையை பார்த்த பிறகு, அவரது படங்கள் ஆன 2006 இல் வெளிவந்த கொக்கி, 2007 இல் லீ மற்றும் 2009 இல் லாடம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

   

பின்னர் பிரபு சாலமன் விதார்த்தை கதாநாயகனாக வைத்து 2010 ஆண்டு மைனா திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்று ஒரே படத்தின் மூலம் பேரும் புகழும் அடைந்தார் விதார்த். அதற்கு அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த திரைப்படம் முதல் இடம்.

 

தொடர்ந்து கொலைக்காரன், ஜன்னல் ஓரம், வெண்மேகம், அஜித்தின் திரைப்படமான வீரம், குற்றமே தண்டனை, சித்திரம் பேசுதடி சமீபத்தில் நல்ல விமர்சனங்களை பெற்ற இறுகப்பற்று ஆகிய படங்களில் நடித்துள்ளார் விதார்த்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விதார்த், தான் சினிமாவில் பட்ட கஷ்டங்களை பற்றி பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் நான் ரொம்ப வருஷம் சினிமாவுல நல்ல வாய்ப்புக்காக தேடி அலைஞ்சிட்டு இருந்தேன், பிரபு சாலமன் தான் என்ன மைனா படத்தில என்ன நாயகனா நடிக்க வச்சாரு. ஆனா மைனா படத்தில் நடிச்சதுக்கு எனக்கு ஒரு லட்சம் மட்டும் தான் சம்பளம் கொடுத்தாங்க என்று வருத்தத்துடன் பேசி இருக்கிறார் விதார்த்.

More in CINEMA

To Top