மௌனம் பேசியதே திரைப்படம் இந்த 2 டாப் ஹீரோ பண்ணவேண்டியது… ஓபனாக பேசிய சசிகுமார்…

By Meena on செப்டம்பர் 16, 2024

Spread the love

சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் பாலாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த சசிகுமார் சேது திரைப்படத்தில் பணியாற்றினார். அதற்குப் பிறகு அமீருடன் இணைந்து மௌனம் பேசியதே மற்றும் ராம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார்.

   

2008 ஆம் ஆண்டு சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கி தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதற்கு அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு ஈசன் திரைப்படத்தை இயக்கினார் சசிகுமார். அதற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சசிகுமார்.

   

தன்படி நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, கொடிவீரன், குட்டிப்புலி, வெற்றிவேல், கருடன், அயோத்தி போன்ற நல்ல கதையம்சம் கொண்ட வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் சசிகுமார். இவரது படங்கள் என்றாலே குடும்பத்துடன் சென்று பார்க்கும் விதமாக கண்ணியமாக இருக்கும்.

 

மௌனம் பேசியதே திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ஆக்சன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் சூர்யா, த்ரிஷா, நந்தா போன்றோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை அமீர் இயக்கி இதன் மூலம் இயக்குனராக அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் செய்தியாக வெற்றி பெற்றது. திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமானது இந்த மௌனம் பேசுதே திரைப்படத்தின் மூலம் தான். மேலும் சசிகுமார் இந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சசிகுமார் மௌனம் பேசியதே திரைப்படத்தில் முன்னதாக டாப் 2 ஹீரோக்கள் நடிக்க இருந்ததாக கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் மௌனம் பேசியதே திரைப்படத்தில் முதலில் நடிக்க நாங்கள் யோசித்து இருந்தது விக்ரமையும் சூர்யா அவர்களையும் தான். ஆனால் விக்ரம் சேது பட வெற்றிக்கு பிறகு அடுத்ததாக தான் நடிக்கும் திரைப்படத்திற்கு நல்ல ஒரு பிரபலமான இயக்குனர் மற்றும் டீம் ஓட தான் நடிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டார். அதனால்தான் சூர்யாவையும் நந்தாவையும் வைத்து முடிவு செய்து படத்தை எடுத்தோம் என்று ஓபனாக கூறியிருக்கிறார் சசிகுமார்.