தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகர் தான் அபிநய்(44). இவர் கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய இறப்புக்கு பின் இவர் குறித்து பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
அந்தவகையில் தற்போது ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது. ‘கொள்ளி வைக்க ஒரு ஆள் வேண்டாமா?’ என்ற வார்த்தையின் வலியை அபிநய்யின் இறுதிச்சடங்கு உணர்த்திவிட்டது என்று சொல்லப்படுகிறது. அபிநயின் இறுதிச்சடங்கு செலவை தாம் ஏற்க நேரிடுமோ என்ற எண்ணத்தில், உறவினர்கள் கூட இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இப்படி ஒரு கொடுமையான முடிவா நமக்கு என்று அபிநய்யின் ஆத்மா எண்ணி வருந்திய நேரத்தில்,KPY பாலா உள்ளிட்ட சிலரின் முயற்சியால், தூரத்து உறவினர் ஒருவரை வரவழைத்து கொள்ளி வைத்துள்ளனர்.
