அடக்கடவுளே..! அரசு வேலைக்காக இப்படியா…? ஹோட்டலில் கும்பலாக பிடிபட்ட பெண்கள்… போலீஸ் விசாரணையில் பயங்கர அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on தை 9, 2026

Spread the love
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் உள்ள ஹோட்டல் கோஹினூரில், காவல்துறை நடத்திய சோதனையில் சில பெண்கள் பிடிபட்டனர். பிபிஎஸ்சி (BPSC) ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வின் வினாத்தாள் கசிந்தது தொடர்பான மோசடியில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த பெண்கள், கசிந்த வினாத்தாளுக்கான பதில்களை மனப்பாடம் செய்வதற்காக அந்த ஹோட்டலில் கூடிதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறை சோதனை நடத்தி, அவர்களைக் கைது செய்தது.

இந்தச் சம்பவம், அரசு வேலைக்கான தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுச் சம்பவங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. போலீசார் இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.