தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என்று கொண்டாடப்பட்டவர் .அரசியலிலும் சரி , சினிமாவிலும் சரி கால் பதித்து கலக்கிய இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு சில ஆண்டுகளாக வே உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் சமீபத்தில் சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் பூரண குணமடைந்து விடு திரும்பினார். பிறகு நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
சினிமாவில் நடிகர் சங்க தலைவராக இருந்து இவர் செய்த சாதனைகள் ஏராளம் .அதேபோல அரசியலிலும் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் தலைவராகவும் சிறந்து விளங்கினார். இந்நிலையில் நேற்று அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வைரலானது .இதைத் தொடர்ந்து இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென நடிகர் விஜயகாந்த் மரணம் அடைந்து விட்டார் என்ற மருத்துவமனை அறிக்கை வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்பொழுது ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும், அவரது தொண்டர்களும் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் தேமுதிக பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகர் விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் அவர் தனது தொண்டர்களிடம் , ‘தொண்டர் படை எனக்கு பேர் உதவி அளித்தீர்கள். உங்க எல்லாருக்கும் என்னுடைய நன்றி .தொண்டர் படைக்கு ஒரு வருத்தம் இருக்கு. கடைசியா ஏதோ ஒரு பேர் வரும் அப்படி கிடையாது. கண்ணை எப்படி இமை பாதுகாக்குமோ அதேபோல இந்த விஜயகாந்தை பாதுகாப்பது இந்த தொண்டர் படை தான். அதனால என்னுடைய மக்களே உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் என்று எனக்கு தெரியாது. என் உயிரே நீங்க தான்’ என்று மறைந்த நம் கேப்டன் விஜயகாந்த் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..