MGR-க்கு அப்புறம் நான் தான்…! ‘அயலான்’ பட டீசர் லான்ச்சில் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ வைரல்…!

By Begam on அக்டோபர் 7, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.

   

மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திர்கு இசையத்துள்ளார். கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக படத்தின் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் அதிக காலம் நடந்துவருகிறது.இந்த நிலையில் படம் வரும் பொங்கல் ட்ரீட்டாக வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

   

 

இதைத்தொடர்ந்து அயலான் திரைப்படத்தின் டீசர் லான்ச் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு alien, spaceship எல்லாம் வைச்சு இதுக்கு முன்னாடி MGR அவர்கள் ஒரு படம் ட்ரை பண்ணி இருக்காங்க. அதுக்கப்புறம் இப்ப நம்ம தான் ட்ரை பன்றோம். தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு பிறகு ஒரு concept வருது.’ என கூறியுள்ளார். தற்பொழுது அவர் பேசிய இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது . இதோ அந்த வீடியோ…