ஐ.பி.எல். 2026 தொடரின் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணி தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம், நடப்பு சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் மட்டுமே பெற்று தனது ஐ.பி.எல். பயணத்தை ஏமாற்றத்துடன் நிறைவு செய்துள்ளது.
சென்னை அணியின் இந்தத் தோல்வியால், இந்த சீசனில் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனியை மீண்டும் சி.எஸ்.கே. சீருடையில் மைதானத்தில் காணும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பும் முடிவுக்கு வந்துள்ளது. கால் தசைப்பிடிப்பு மற்றும் கட்டைவிரல் காயம் போன்ற உடல்நலப் பாதிப்புகள் காரணமாக, இந்த சீசனில் எம்.எஸ். தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஒட்டுமொத்த தொடரிலும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சி.எஸ்.கே. அணியின் டிரெசிங் ரூமில் அவர் காணப்பட்டார்; மேலும் இறுதிப் போட்டி நடப்பதற்கு முன்பாகவே அவர் தனது வீட்டிற்குத் திரும்பினார்.
தற்போது 44 வயதான எம்.எஸ். தோனி, ஒரு கிரிக்கெட் வீரராக தனது விளையாட்டு வாழ்வின் உச்சத்தைக் கடந்துவிட்ட போதிலும், உலக கிரிக்கெட்டில் அவரது ஆளுமையும் செல்வாக்கும் இன்னும் குறையாமல் அப்படியே நிலைத்திருக்கிறது. அடுத்த ஐ.பி.எல். தொடர் நடக்கும் போது தோனிக்கு 45 வயதாகியிருக்கும் என்பதால், அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, அடுத்த ஆண்டு எம்.எஸ். தோனியை மீண்டும் களத்தில் பார்க்க முடியுமா என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “நிச்சயமாக அடுத்த ஆண்டே உங்களுக்கு அது தெரிய வரும், எனக்கும் அடுத்த ஆண்டே தான் அது தெரிய வரும்” என்று மர்மம் விலகாமல் கூறினார். மேலும் அவர் பேசுகையில், “வெளிப்படையாகச் சொன்னால் அவர் இல்லாதது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு. குறிப்பாக கடைசி ஓவர்களில் அவர் களமிறங்கும்போது எதிரணிக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துவார். அவர் களத்தில் இருப்பதன் மூலமே ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். இந்த சீசனில் அவரை நாங்கள் மிகவும் மிஸ் செய்தோம். எனினும், எங்களிடம் இருந்த வீரர்களைக் கொண்டும், இந்த ஆண்டு அவர்கள் பெற்ற அனுபவத்தைக் கண்டும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்தார்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப்…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு (JLN) அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக…
கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…
சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…