குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஆனது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் சுமார் 270 பேர் உயிரிழந்தார்கள். இந்த விபத்து வீடியோவை செல்போனில் எடுத்தது அகமதாபாத் விமான நிலையம் அருகே வாடகை வீட்டில் குடியிருக்கும் 17 வயது சிறுவன் ஆர்யன் தான். விமானம் அருகில் பறந்து செல்வதை தற்செயலாக படம் பிடித்திருக்கிறார். அது கீழே விழுந்து தீப்பிடித்தது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் செல்போனில் பதிவு செய்த வீடியோவை முதன்முதலாக தனது சகோதரியிடம் தான் காட்டி இருக்கிறார். அதன்பிறகு அந்த 24 நொடி வீடியோ காட்சி ஆனது உலகம் முழுவதும் வைரலாக தொடங்கியது.
விமான விபத்தை முன்பே அறிந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் செல்போனில் படம் பிடித்த சிறுவனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். அவர் தன்னுடைய தந்தையோடு வந்து கூறுகையில்,” விமானம் அருகில் பறந்து செல்வதை தற்செயலாக படம் பிடித்தேன். அது விழுந்து தீப்பிழம்பு வெளியானதை பார்த்து பயந்து போனேன். இந்த வீடியோ என்னுடைய சகோதரி தான் முதலில் பார்த்தார். அதன் பிறகு ஆரியனை அவருடைய தந்தையோடு போலீசார் அனுப்பி வைத்துள்ளார்கள்.
இதுகுறித்து அவருடைய சகோதரி கூறுகையில், “விமான விபத்தை பார்த்து பயந்து போன என்னுடைய தம்பி சரியாக பேச முடியாத நிலையில் இருந்தார். விமான நிலையம் அருகே குடியிருந்தால் ஆபத்து வேறு இடத்திற்கு செல்லலாம் என்று கூறினான். எதுவும் சாப்பிடாமல் இரவு முழுதும் தூங்காமல் இருந்தான்” என்று கூறியிருக்கிறார். இந்த சிறுவன் என்றாவது ஒருநாள் விமானத்தில் சென்றுவிட வேண்டும் என்ற ஆசையில் இருந்தாராம். ஆனால் இந்த விபத்தை பார்த்ததும் இனிமேல் விமானத்தில் பயணிக்கவே கூடாது என்ற மனநிலையில் உள்ளாராம்.
