நடிகர் நடிகைகளின் உதவியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…!!! கேட்டா அசந்து போயிடுவீங்க…!!!

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் தங்களுக்கு என்று உதவியாளர்களை வைத்திருப்பது வாடிக்கையான ஒன்று . படக்குழுவினர் அவர்களுக்காக உதவியாளர்களை  ஏற்பாடு செய்தாலும் இவர்கள் தனியாக தங்களுக்கு என்று ஹேர் ஸ்டைலிஸ்ட் ,மேக்கப் மேன் என்று பல உதவியாளர்கள் வைத்துள்ளார்கள்.

   

இவர்களுக்கு கொடுக்கப்படும் ஒருநாள் சம்பளம்  பற்றிய தகவல் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி  வைரலாகி வருகிறது .இந்த சூழ்நிலையில் தெலுங்கு திரைப்படத் துறை புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது .அதாவது நடிகர் நடிகைகள் தங்களுடைய உதவியாளர்களுக்கு தாங்களே  சம்பளம் கொடுக்க வேண்டும். இதனை தயாரிப்பாளர்கள் வழங்க முடியாது.

இதனால் அதிர்ச்சயடைந்த தெலுங்கு பட நடிகர் நடிகைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது நிலவரப்படி  நடிகர் நடிகைகள் தங்களுடைய உதவியாளர்களுக்கு கொடுக்கும் சம்பளங்களின் விவரம் வெளியாகி  இருக்கிறது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் உதவியாளர்களுக்கு- 80 ஆயிரம், நயன்தாரா உதவியாளர்களுக்கு – 65 ஆயிரம், திரிஷா உதவியாளர்களுக்கும் – 35 ஆயிரம் ,ரஜினிகாந்த் உதவியாளர்களுக்கு – 75 ஆயிரம், விஜய் உதவியாளர்களுக்கு – 50,000 ஆயிரம், தனுஷ் உதவியாளர்களுக்கு -50,000 ஆயிரம்,நடிகர் சமுத்திரக்கனி உதவியாளர்களுக்கு-35 ஆயிரம், சிம்பு உதவியாளர்களுக்கு – 80,000ஆயிரம், அஜித் உதவியாளர்களுக்கு – 25 ஆயிரம் .

இதனால்  தயாரிப்பாளர்களுக்கு அதிக அளவில் பணம் செலவாகிறது. உதவியாளர்களுக்கு மட்டும் அவர்கள் ஒரு படத்திற்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை செலவு செய்கின்றனர். தெலுங்கு திரைப்படத்துறை  போட்ட விதிமுறை தமிழ்  திரையுலகிலும் வந்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

author avatar