வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

By Muthu Mani on சித்திரை 16, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வலைவீசித் தேடியுள்ளார். அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த கொடூரச் செயல்களை வீடியோவாகப் பதிவு செய்த அயாஸ், அவற்றைப் பயன்படுத்தி அந்தப் பெண்களையும் சிறுமிகளையும் மிரட்டியுள்ளார். மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதுடன், சில வீடியோக்களை இணையத்திலும் பதிவேற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

   

இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. அனில் போண்டே அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் முகமது அயாஸ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது, சுமார் 180 சிறுமிகளின் 350-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளை உறைப்படையச் செய்துள்ளது.

   

கைது செய்யப்பட்ட அயாசை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், பரத்வாடா பகுதியில் உள்ள அவரது வீடு சட்டவிரோத ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் வீட்டின் ஒரு பகுதியை இடித்து அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.