சர்வதேச சந்தையில் ஏற்பட்ட அதிரடி விலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜூலை 22) தங்கத்தின் விலை முன்னெப்பழுதும் இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தைத் தொட்டுப் பாய்ந்துள்ளது. இதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கும், ஒரு சவரன் ரூ .1,680 வரை அதிகரித்து ரூ.1,07,440-க்கும் விற்பனையாகி வருகிறது; உலகளவில் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மீது திரும்பியுள்ளதே இந்தத் தொடர் விலை உயர்வுக்கு முதன்மை காரணமாக அமைந்திருக்கிறது.
