இந்த புகைப்படத்தில் இருப்பவர் கோலிவுட்டின் முன்னணி நடிகை!… யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!…

இந்த புகைப்படத்தில் இருப்பவர் கோலிவுட்டின் முன்னணி நடிகை!… யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்களை மனதை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சன் தொலைக்காட்சியில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில்  தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து கலைஞர்  தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ‘நீதானா அவன்’ என்ற படத்தில் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.

இதை தொடர்ந்து அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றா.ர் இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது.

தற்பொழுது தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்த க|பெ ரணசிங்கம் திரைப்படம் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று தந்தது.

இவர் தற்பொழுது பர்ஹானா என்ற படத்தில் இஸ்லாமிய பெண்ணாக நடித்துக் கொண்டு வருகிறார். இதில் அவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்பொழுது தனது இளம்வயது  புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது

இதோ அந்த புகைப்படம்….

Begam