மணிகண்டனை பார்க்க வந்த நபர்கள்!… தந்தையாக, மகனாக, கணவனாக, அண்ணனாக  நெகிழ்ச்சி பொங்கிய தருணம்!… எமோஷனல் ப்ரோமோ இதோ!….

மணிகண்டனை பார்க்க வந்த நபர்கள்!… தந்தையாக, மகனாக, கணவனாக, அண்ணனாக  நெகிழ்ச்சி பொங்கிய தருணம்!… எமோஷனல் ப்ரோமோ இதோ!….

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது விஜய் டிவியில் தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

80 நாட்களை கடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. இனிவரும் நாட்கள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. போட்டியாளர்களும் டைட்டிலை வெல்ல கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஃப்ரீஸ் டாஸ்க் இந்த வாரத்திற்கு பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த டாஸ்க்கின் படி போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். நேற்றைய தினம் மைனா நந்தனி, அமுதவாணன், சிவின் போன்றோரின் குடும்பத்தினர்கள் வருகை தந்தனர்.

இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோவில் ரட்சிதாவின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார்.தற்பொழுது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் மணிகண்டனின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர்.

அந்தவகையில் மணிகண்டனின் மனைவி, மகன், அம்மா ஆகியோர் வந்திருந்தனர். அதுமட்டுமல்லாது அவரது தங்கையான பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் வந்துள்ளார். அத்தோடு மணிகண்டன் ஒவ்வொருவரையும் கட்டியணைத்து வரவேற்கின்றார். இவ்வாறாக இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….

Begam