மகன் மறைந்த சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி… கடவுள் கொடுத்த வரம்… விஞ்ஞானத்தை மிஞ்சிய மெய்ஞானம்… கிராமமே கொண்டாடும் அதிசயம்…!!!

By Rajeshwari on பங்குனி 31, 2026

Spread the love

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்குப் பிறகு அந்த குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தந்தை இறந்த சில காலத்திலேயே இந்த குழந்தை பிறந்துள்ளதால், இது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல என்றும், தங்களை விட்டுப் பிரிந்த மகனே மீண்டும் பிறந்து வந்துள்ளதாக ரகுவன்ஷியின் பெற்றோரும் உறவினர்களும் நெகிழ்ச்சியுடன் நம்புகின்றனர்.

மேலும் “எங்கள் மகன் மீண்டும் எங்களிடமே திரும்பி வந்துவிட்டான்” என்று அவர்கள் மகிழ்ச்சிக் கண்ணீருடன் இந்த அதிசயத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

இதனால் அறிவியல் ரீதியாக இது ஒரு சாதாரண பிறப்பாக இருந்தாலும், ஒரு குடும்பத்தின் துயரத்தை போக்கும் விதமாக இந்த குழந்தை பிறந்திருப்பதை அந்த கிராமமே ஒரு தெய்வீக அற்புதமாகப் பார்க்கிறது. உயிரிழந்த ரகுவன்ஷியின் சாயலிலேயே இந்தக் குழந்தை இருப்பதாகக் கூறும் அவரது குடும்பத்தினர், இந்தக் குழந்தையின் வருகை தங்கள் குடும்பத்திற்குப் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.